மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை நூல் வெளியீட்டு விழா நடிகர் சத்யராஜ் சிறப்புரை 



கோவை;-ஏப்-19  பா.திருமாவேலன் எழுதிய இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர் நூல் அறிமுக விழா சமூக நீதிப் பேரவையின் சார்பில் கோயம்புத்தூர்  ஆர் எஸ் புரம் கலையரங்கில் நடைபெற்றது நூல் அறிமுக விழாவில் எழுத்தாளர் பரணன் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந கவுதமன் திரைப்பட நடிகர் சத்யராஜ் திராவிட முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் கலந்துகொண்டு நூலின் சிறப்புகளையும் பெரியார் கொள்கைகள் தத்துவங்களைப் பற்றி பல்வேறு ஒப்பீடுகளுடன் தமிழுக்காகவும் தமிழ்நாட்டின்  சீர்திருத்தத்திற்கவும் பெரியார் அவர்கள் ஆற்றிய பணிகளையும் போராட்டங்களையும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் உள்ளடக்கி இருக்கின்ற ஆயிரத்து 800 பக்கங்கள் அடங்கிய நூலின் சாராம்சங்களை முன்னெடுத்து நூலின் அறிமுக உரையை ஆற்றினார்கள் நூலாசிரியர் திருமாவேலன் ஏற்புரையற்றினார் நிகழ்ச்சிக்கு வரவேற்புரை வழக்கறிஞர் சென்னியப்பன் நன்றியுரை வழக்கறிஞர் சீனிவாசன் நிகழ்ச்சியை  சிவக்குமார் தொகுத்து வழங்கினார்
                      நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்