மக்கள் வெளிச்சம் நாளிதழ்
தடையை மீறி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி உயிரிழப்பு
பொள்ளாச்சி ஆழியாரில் தடையை மீறி ஆற்றில் குளித்த சுற்றுலா பயணி நீரில் மூழ்கி உயிரிழப்பு.
சென்னை குரோம்பேட்டை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் ஹரிஹரன். இவர் அதே பகுதியை சேர்ந்த 17 பேர் வேன் மூலம் அங்கலக்குறிச்சி கிறிஸ்தவ ஆலயத்திற்கு வந்துள்ளனர். மதியநேரம் என்பதால் குளிப்பதற்காக ஆழியார் ஆற்றில் தடைசெய்யப்பட்ட பகுதியில் 17 பேர் குளிக்கச் சென்றுள்ளனர். அப்பொழுது அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்ற ஹரிஹரன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக ஆழியார் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது, ஆழியார் ஆற்றில் புதைமணல் மற்றும் சுழல் உள்ள பகுதி. இப்பகுதியில் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆழம் தெரியாமல் குளிப்பதால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனால் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறை மூலம் தடை செய்யப்பட்ட பகுதி என பதாகைகள் வைத்துள்ளனர். இந்த தடையை மீறி குளிப்பதால் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு தடுப்பு வேலிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆழியார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment