மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கால அவகாசம் வழங்காவிட்டால் காலவரையற்ற கடையடைப்பு



பொள்ளாச்சி;-ஏப்-11 பொள்ளாச்சியில் விதிமீறல் கட்டடங்களை முறை படுத்த கால அவகாசம் வழங்காட்டால்  காலவரையற்ற கடையடைப்பு நடத்த வேண்டியது வரும் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
பொள்ளாச்சி நகரின் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் வர்த்தக நோக்கிலான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனி ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விதிமீறல்கள்  இருப்பதும் தெரியவந்தது.  இதனையடுத்து நகராட்சி நிர்வாகம் அதிரடியான ஆய்வுகளை மேற்கொண்டு விதிமீறல் கட்டடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களை விநியோகித்தனர். 
இதில் பாதிக்கப்பட்ட சிலர் நீதிமன்றத்தை நாடினர்.  ஆனால் வருகிற 20ம் தேதிக்குள் இந்த விதிமீறல்களை முறைப்படுத்திக் கொள்ள வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தொழில் வர்த்தக சபை, சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் மகாலிங்கபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து நிர்வாகிகள் கூறியதாவது, பொள்ளாச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே இதுபோன்ற விதிமீறல்கள் உள்ளன. மாஸ்டர் பிளான் அடிப்படையில் 5 ஆண்டுக்கு ஒரு முறை சீராய்வு செய்திருக்க வேண்டும்.  ஆனால் கடந்த 45 ஆண்டுகளாக இந்த சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில் 20ம் தேதிக்குள் விதிமீறல்களை சரி செய்வது என்பது இயலாத காரியம். ஆகவே அரசு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
உரிய தீர்வு எட்டப்படாத நிலையில் காலவரையற்ற கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தனர்.

                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்