மக்கள் வெளிச்சம் நாளிதழ்

6லட்சம் மதிப்புள்ள மதுபாட்டிகள்அழிப்பு 

மதுவிலக்கு போலீசார் நடவடிக்கை.







பொள்ளாச்சி-ஏப்-13
மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6 லட்சத்து 34,350 மதிப்பிலான  மது பாட்டிகள்  மாவட்ட ஆட்சியரின்  உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் பொள்ளாச்சி நகரம், சுற்று வட்டார கிராமங்கள், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் சட்டவிரோதமாக வெளிச் சந்தைகளில் விற்கப்படும் மது, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள்  மற்றும் பாண்டிச்சேரி இடங்களிலிருந்து சட்டவிரோதமாக கடத்தி விற்பனைக்காக கொண்டுவரப்படும் மது ஆகிவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இதில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறிமுதல் செய்யப்பட்ட மதுவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.
மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், ஆய்வாளர் அமுதா, பொள்ளாச்சி கோட்ட கலால் அலுவலர் விஜயகுமார், கலால் மேற்பார்வை அலுவலர் அலமேலுமங்கை மற்றும் காவலர்கள் விஜயகிரி, முருகன் ஆகியோர் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.
இதுகுறித்து துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கூறுகையில், கடந்த ஜனவரி, பிப்ரவரியில் விற்க வைத்திருந்த  4ஆயிரத்து 229 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் பிறமாநில மதுபாட்டில்கள் அடங்கும். 
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்ட மது  நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் தரையில் கொட்டி அழிக்கப்பட்டது. 
சட்டவிரோத மது விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து மது கடத்தி வருவதை தடுக்கவும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்