மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை பெட்ரோல்,டீசல், எரிவாயு உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோவை;-ஏப்-07 பெட்ரோல் ,டீசல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், சிங்காநல்லூர் சட்டமன்றத்திற்குட்பட்ட, உப்பிலிபாளையம் சர்க்கிள் காங்கிரஸ் சார்பாக, உழவர் சந்தை முன்பு 4ம் தேதி, காலை 11 மணிக்கு மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயல் தலைவர் மயூரா எஸ்.ஜெயக்குமார் மாட்டுவண்டியில் வந்து,நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.நிகழ்ச்சியில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து பாடையில் எடுத்து வந்து, தப்பட்டை அடித்து சங்கு ஊதி , ஊர்வலம் நடத்தப்பட்டது மேலும் மோடி அரசை உடனே பதவி விலகச் சொல்லி கோஷங்கள் எழுப்பப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி மற்றும் கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி சங்கர் ,சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் எஸ்எம்எஸ் தலைவர் ராஜாமணி, உமாபதி, இருகூர் சுப்பிரமணியம், GVGகுருசாமி, அசோக்குமார், காந்த குமார், ராமநாகராஜ், நந்தகோபால், தங்கம் பழனிச்சாமி, ஜெயபிரகாஷ், எல்ஐசி மருதாசலம், ஸ்ரீநிதி, உமாமகேஸ்வரி, சுரேஷ்குமார் திலகவதி ,ஸ்ரீதர், தாமஸ் வர்கீஸ், மோகன்ராஜ், முருகன் ,ஷேக் பாய் ,வினோத்குமார் , பேக்கரி சந்திரன் , ஜேம்ஸ் ஜெயக்குமார், கணேசன், கிருஷ்ணமூர்த்தி,அஸ்மத், பேக்கரி சந்திரன், பாலக்கார சந்திரன் ,ராமன், சண்முகம், காமராஜ், கல்யாணி, முஸ்தபா ,இஸ்மத் , குமரேசன், சரவணன் ,சூர்யா, கிளின்டன் ,அமீன், சம்பத், பாலு, குணசேகரன், மாரிமுத்து, செல்வராஜ், சுந்தரம் , பழனிச்சாமி, எஸ்எம்எஸ் மனோகரன், தேவராஜ், லீமாரோஸ் ,உட்பட பலர் கலந்து கொண்டர்.
Comments
Post a Comment