மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பழைய துணி குடோனில்
கேஸ் கசிவால் தீ விபத்து
பொள்ளாச்சி;-ஏப்-29 பொள்ளாச்சியை அடுத்த ஜமீன் முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் கிருஷ்ணகுமார் என்பவர் வாடகைக்கு குடோன் அமைத்து பனியன் வேஸ்ட் தொழில் செய்து வருகிறார். அந்த குடோனில் ஏராளமான மூட்டைகளில் பனியன் வேஸ்ட்கள் இருந்தன. மதியம் கிருஷ்ணகுமார் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் அங்கிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்து தீ வேகமாக பரவத் துவங்கியது. சிலிண்டர் வெடித்ததும் கிருஷ்ணகுமார் குடோனில் இருந்து வெளியே ஓடி வந்தார். தகவல் அறிந்து பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இவ்விபத்தில் காயமடைந்த கிருஷ்ணகுமார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
Post a Comment