மக்கள் வெளிச்சம் நாளிதழ்

சதுரங்க விளையாட்டில் 
5 ஆண்டுகளில் இந்தியா முதலிடம்



பொள்ளாச்சி;-ஏப்-18 சதுரங்க விளையாட்டில் இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் முதலிடத்தை பிடிக்கும் என்று பயிற்சியாளர் ஆர்.பி. ரமேஷ் தெரிவித்தார்.
தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான 31வது சதுரங்க
சாம்பியன்ஷிப் போட்டிகள் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக்  கல்லூரியில் நேற்று துவங்கின.
சக்தி குழும நிறுவனங்களின் நிறுவன தலைவர் அமரர் அருட்செல்வர் டாக்டர். நா. மகாலிங்கத்தின்
பிறந்தநாள் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி
டாக்டர். மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக்
கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க சங்கமும் இணைந்து இப்போட்டியினை நடத்துகின்றன. போட்டியின் துவக்க விழாவிற்கு சக்தி குழுமத்தின் தலைவர்
டாக்டர். எம். மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு
சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி, கல்லூரி செயலர் டாக்டர். சி. ராமசாமி, கல்லூரி முதல்வர் முனைவர் ரத்தினவேலு,
தமிழக அணியின் பயிற்சியாளர் கிராண்ட் மாஸ்டர் எம். ஷியாம் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் புகழ்பெற்ற
பயிற்சியாளரான ஆர்.பி.ரமேஷ் போட்டிகளை துவக்கி வைத்த பின் நிருபர்களிடம் கூறியதாவது, சமீபகாலமாக இந்தியாவில் சதுரங்க ஆட்டத்தில் பலரும் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் சதுரங்க விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்கமளித்து வருகின்றன. குறிப்பாக உலக அளவிலான சதுரங்கப் போட்டியினை தமிழகத்தில் நடத்த மாநில அரசு மிகக் குறுகிய கால அவகாசத்தில் ரூ. 100 கோடியை ஒதிக்கீடு செய்துள்ளதை அனைத்து தரப்பினரும் பாராட்டுகின்றனர்.
சதுரங்க விளையாட்டை பொருத்தவரை உலக அளவில் இந்தியா தற்போது பத்தில்  நான்காவது இடத்தில் உள்ளது. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இந்தியா சதுரங்க விளையாட்டில் முதலிடத்தை பிடிக்கும். இவ்வாறு தெரிவித்தார். 
இப்போட்டிகள் வருகின்ற 23ம் தேதி
வரை நடைபெற உள்ளது.  மொத்தம் 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த போட்டியில் 22 மாநிலங்களிலிருந்து 237 பேர் பங்கேற்க உள்ளனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்