மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூர் காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா



 கோவை;-ஏப்-28 அருள்மிகு சூலூர் காட்டூர் மாகாளியம்மன் திருக்கோவில் 15 நாள் திருவிழா சாட்டப்பட்டு இன்று அம்மனுக்கு அக்னி கம்பம் போடும் நிகழ்வு நடைபெற்றது இன்று முதல் வரும் புதன்கிழமை வரை நாள்தோறும் ஐயாயிரம் பக்தர்களுக்கு மதியம் இரவு அன்னதானம் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து கோயில் வளாகத்தில் நடைபெறும் ஊரின் வளம் செழிக்கவும் உலக மக்கள் நலம் பெறவும் மக்கள் நோய் நொடி இல்லாமல் பரிபூரண வாழ்வு வாழ வேண்டியும் அம்மனை வேண்டி வருவோருக்கு தீராத நோய் தீர்த்து சகல செல்வங்களையும் அள்ளித் தர வேண்டும் என்று வேண்டி 01/05/2022 அன்று 108 திருவிளக்கு வழிபாடு விமர்சையாக நடைபெறும்  அம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெறும் 4 /5/2022 அன்று காட்டூர் மாகாளியம்மன் நொய்யல் ஆற்றங்கரையில் சிங்க வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு 500க்கும் மேற்பட்ட பால் குடங்களுடன் தீர்த்தத்துடன் வாத்தியங்கள் மேளதாளங்கள் முழங்க பவனி வந்து மாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் பொங்கல் மாவிளக்கு கொண்டுவரும் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து மஞ்சள் நீர்  மகாமுனி பூஜை அபிஷேக பூஜை நடைபெறும்
                  நிருபர் சூலூர் சேகர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்