மக்கள் வெளிச்சம் நாளிதழ்

4 கிலோ கஞ்சா பறிமுதல் 
ஒடிசா மாநிலத்தவர் கைது


பொள்ளாச்சி, ஏப்-28 பொள்ளாச்சியில் 4 கிலோ கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த ஒடிசா மாநிலத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி போடிபாளையம் ரோட்டில் ஒருவர் கஞ்சாவுடன் செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு  அரசு பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வடமாநிலத்தவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில் உள்ளே கஞ்சா இருப்பது தெரியவந்தது. போலீசார் விசாரித்ததில் அவர்,  ஒடிசா மாநிலம்  தென்துலிபாடியைச் சேர்ந்த பசந்த் குமார் நாத் மகன் பிரசாந்த் குமார் நாத் என்பதும், விற்பனைக்காக 4 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. 
இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்