மக்கள் வெளிச்சம் நாளிதழ்

முகநூலில் மலர்ந்த காதல்
15 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது




பொள்ளாச்சி, ஏப். 19- முகநூலில் மலர்ந்த காதலால் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் வெள்ளகுளத்துப்பட்டி அம்மன் சத்திரம் புதூரைச் சேர்ந்த ஒரு தம்பதியர் தனது 15 வயது மகளை கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிங்காநல்லூரில் உள்ள மில் ஒன்றில் வேலைக்குச் சேர்த்து விட்டனர். மில் வளாகத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த 15 வயது சிறுமிக்கும், நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கடலங்குடியைச் சேர்ந்த டெம்போ டிரைவர் தினகரன் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பானது. நட்பு காதலாக மாறி மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
      இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு  அந்த சிறுமியின் தாயும், பாட்டியும் சிங்காநல்லூருக்கு வந்து மில்லில் இருந்த சிறுமியை பார்த்து நலம் விசாரித்தனர். 
கடைக்கு செல்லவேண்டும் என்று கூறியதால் அம்மாவும், பாட்டியும் சிறுமியை அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் வந்தனர்.
முன்பே திட்டமிட்டபடி அங்கு காத்திருந்த காதலன் தினகரன் 15 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
மகளைக் காணவில்லை என அவரது தாயார்  கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கிழக்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், தினகரன் எனது காதலியான 15 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு தனது வீட்டிற்கு சென்று திருமணம் செய்து விட்டதாக தெரிய வந்தது. உடனடியாக மயிலாடுதுறை விரைந்த போலீசார் தினகரனை  பொள்ளாச்சிக்கு அழைத்து வந்தனர். 15 வயது சிறுமியை திருமணம் செய்ததால் போக்சோ  சட்டத்தின்கீழ் வழக்கை பதிவு செய்த கிழக்கு போலீசார் தினகரனை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
                         நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்