மக்கள் வெளிச்சம் நாளிதழ்

காட்டு யானைகளை விரட்ட 
டாப்சிலிப்பில் இருந்து கிளம்பியது  சின்னத்தம்பி 


பொள்ளாச்சி;-ஏப்-30 திண்டுக்கல் அருகே  சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்ட டாப்ஸ்லிப்பில் இருந்து சின்னத்தம்பி யானை கிளம்பியது.  
ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் (உலாந்தி) வனச்சரகத்திற்கு உட்பட்ட   கோழிகமுத்தியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இங்கு  27 யானைகள் வனத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நன்கு பழக்கப்படுத்தப்பட்டு, பயிற்சி பெற்ற கும்கி யானைகள் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்கள் பலவற்றுக்கும் சென்று காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு கோவை தடாகத்தில் செங்கல் சூளைகள் நிறைந்த பகுதியிலும், குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும்  அதிக அளவில் காட்டு யானைகள் நடமாடின. பொது டாப்சிலிப்பில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட கும்கி யானைகள் உதவிகளோடு   விநாயகன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய இரு காட்டு  யானைகள் பிடிக்கப்பட்டன. அதில் விநாயகன் தொப்பக்காடு  யானைகள் வளர்ப்பு முகாமிலும், சின்னத் தம்பியை டாப்சிலிப் அருகே உள்ள யானைகுத்தி வனப்பகுதியிலும்  வனத்துறையினர் விட்டனர். ஆனால் சின்னத்தம்பி யானை  வனப்பகுதியை விட்டு வெளியேறி கோட்டூர் மற்றும் உடுமலை, மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றது.  நீண்ட  போராட்டத்திற்கு பிறகு சின்னத்தம்பி யானையை பிடித்த வனத்துறையினர், கோழிக்கமுத்தி  யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவந்தனர். அங்கு பாகங்களின் உதவியோடு இல்ல தம்பி யானைக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  3 ஆண்டுகளாக நன்கு  பயிற்சி எடுத்த சின்னத்தம்பி யானை முதல் முறையாக காட்டு யானைகளை விரட்டும் பணிக்கு அனுப்பப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சுற்றித்திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணிக்காக சின்னத்தம்பி யானை லாரி மூலம் அழைத்துச் செல்லப்பட்டது என  வனச்சரகர் காசிலிங்கம்  தெரிவித்தார்.
                       நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்