மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி நகரில் 26 இடங்களில்
கொரோனா தடுப்பூசி முகாம்
நகராட்சித் தலைவர் அறிவிப்பு
பொள்ளாச்சி;-ஏப்-29 பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 26 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என நகராட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறியதாவது,
பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் 26 இடங்களில் 30ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. கண்ணப்பன் நகர், அழகாபுரி, வடுகபாளையம், குமரன் நகர், என்.ஜி. எம். கல்லூரி, அண்ணா காலனி, எஸ்.ஆர்.எம்.எச்.எஸ். பள்ளி, வி.எஸ்.ஆர்.பள்ளி, ஜூபிலிகிணறு வீதி, நாச்சிமுத்து பிரசவ விடுதி, ஏ.பி.டி. ரோடு,
மாரியம்மாள் பள்ளி,
மரப்பேட்டை, சிக்கன்ன செட்டியார் பள்ளி,
அமைதி காலனி, காமாட்சி நகர், கோட்டூர் ரோடு,
பெண்கள் மேல்நிலைப்பள்ளி கோட்டூர் ரோடு,
வெங்கட்ராம ஐயர் பள்ளி, பால கோபாலபுரம் பள்ளி,
நந்தனார் காலனி, கோட்டாம்பட்டி, பழைய பேருந்து நிலையம்,
புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய 26 இடங்களில் இந்த முகாம் நடக்கிறது.
இம்முகாமில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாதவர்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணை செலுத்திக் கொள்ளாதவர்கள் மற்றும் 12 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். எனவே நகர்மன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டு பகுதியில் இதுவரை தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாதோர் விவரங்களை சேகரித்து அனைவரும் தடுப்பு ஊசி செலுத்திக்கொள்ள ஒத்துழைப்பு கொடுக்குமாறு இதன் கேட்டுக் கொள்ளப்படுகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.
நிருபர் ஜெகன்
Comments
Post a Comment