மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை சூலூரில் கத்தோலிக்க பேராலயத்தில் குருத்தோலை பவனி




கோவை;-ஏப்-10 குருத்தோலை ஞாயிறு பண்டிகையை ஒட்டி சூலூரில் கத்தோலிக்க புனித சகாய அன்னை பேராலயத்தில்
குருத்தோலை பவனி விமர்சையாக நடைபெற்றது 
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சகாய அன்னை தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு பண்டிகையை ஒட்டி குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம்.
இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக மாகும்.
புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, சகாய அன்னை பேராலயத்தில் விமர்சியாக நடைபெற்றது திருநாள் நிகழ்ச்சிக்காக குருத்தோலையை கையில் எடுத்துக்கொண்டு ஏராளமான கிறிஸ்தவ பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் குருத்தோலைகளை ஏந்திய வண்ணம் பாடல்களைப் பாடி பவனி வந்தனர் 
இப்பகுதியிலுள்ள சகாய அன்னை நகரில் இருந்து புறப்பட்ட இந்த பவனி ஊர்வலம் சகாய அன்னை பேராலயம் வரை நடைபெற்றது.
இந்த தினத்தையொட்டி குருத்தோலைகளால் பேராலயம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. 
குருத்தோலையால் தயாரிக்கப்பட்ட சிலுவைகளை பொதுமக்களுக்கு சகாய அன்னை பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோசப் சுதாகர்
வழங்கி அருள் ஆசி வழங்கினர்.
அருட் தந்தை ஜோசப் சுதாகர் பங்குத்தந்தை 
அருட்தந்தை
 பெனடிக்ட் பிரபாகரன் நல்லாயன் குருத்துவக் கல்லூரி
அருட்தந்தை ஞானப்பிரகாசம்.
தூய ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியோரும் இந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்
குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து அடுத்த வாரம் முழுவதும் பெரிய வாரமாக அதாவது கஷ்ட நாட்களாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள். திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சிறப்பு கன்வென்‌ஷன் கூட்டங்கள் ஆலயங்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்