மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூரில் அம்பேத்கார் பிறந்தநாள் விழா
கோவை;-ஏப்-16 விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘ அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர். தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன். மகாத்மா காந்திக்கு பிறகு, சுதந்திர இந்தியாவின் மாபெரும் தலைவர் என்று போற்றப்பட்டவர், டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் அவர்கள். தன் வாழ்நாள் முழுவதையும் சமூகத்திற்கென அர்ப்பணித்த மாபெரும் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாளை தமிழக அரசு சமத்துவ நாளாக கடைப்பிடிக்க உத்தரவிட்டதை வாழ்த்தி வரவேற்று அவர்தம் பிறந்தநாளில் சூலூர் மக்கள் பொதுநல மன்றத்தின் சார்பில் அம்பேத்கர் அவர்களின் திரு உருவ படத்திற்கு தலைவர் டால்பின் செ. மாரிமுத்து அவர்கள் தலைமையில் மலர் மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது
Comments
Post a Comment