மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவையில் நீட் தேர்வு எதிர்ப்பு நெடும்பயண வரவேற்பு
கோவை;-ஏப்-18 கோவையில் திராவிடர் கழகம் சார்பில் நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்புக்கான நெடும்பயண வரவேற்பு பொதுக்கூட்டம்
கோவை சங்கம் வீதி சுந்தராபுரத்தில் நடைபெற்றது.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு. கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ இந்நிகழ்வில் பங்கேற்று
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணிக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
பின்னர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில், கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன்
*தெற்கு மண்டலத் தலைவர் தனலட்சுமி, குறிச்சி பகுதி பொறுப்பாளர்கள் குறிச்சி கார்த்திகேயன் MC,குறிச்சி காதர் MC, உதயகுமார் MC,குணசேகர் MC, அஸ்லாம் பாஷா MC, மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள்,கழகத் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment