மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ராட்சத மரம் விழுந்து
இரு சக்கர வாகனங்கள் சேதம்.



பொள்ளாச்சி;-ஏப்-11 பொள்ளாச்சி நகரில் பெய்த கனமழைக்கு ராட்சத மரம் விழுந்து 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை தொடர்ந்து  கனமழை  பெய்தது. இதில் பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்த ராட்சத மரம் இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பெரும் சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர்  மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்தை  பார்வையிட்டனர். நகராட்சித் தலைவர் கூறுகையில், கனமழை பெய்து வருவதால் மரம் விழுந்துள்ளது. மேலும்  பொள்ளாச்சி நகர  பகுதிகளில் காய்ந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
                          நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்