மக்கள் வெளிச்சம் நாளிதழ்

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில்
அமைச்சர் சேகர்பாபு வழிபாடு 

பொள்ளாச்சி, ஏப்.09 
பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அம்மனை வழிபட்டார். 
திண்டுக்கல் மாவட்டம்
மங்களப்புள்ளி
லட்சுமி நரசிம்ம
பெருமாள் கோவில்,
தாடிக்கொம்பு
சௌந்தரராஜ
பெருமாள்
கோவில் ஆகியவற்றில்
தமிழக இந்து சமய
அறநிலையத்துறை
அமைச்சர்
சேகர்பாபு ஆய்வு
மேற்கொண்டார். 
அதன் பிறகு அமைச்சர்  சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில், பழனியில்
இரண்டு வருடங்களுக்குள் புதிதாக இரண்டாவது ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்படும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 10 மாதத்தில் ரூ. 2 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. 
தமிழக கோவில்களில் இருந்து  வெளிநாடுகளுக்கு கடத்திக் கொண்டு செல்லப்பட்ட 872 சாமி சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது இவை விரைவில் தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை யில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு அந்த அமைச்சர், அம்மனை வழிபட்டு கோவிலை ஆய்வு செய்தார்.   ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், 
ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, ஆனைமலை பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி, முன்னாள் தலைவர்  சாந்தலிங்க குமார், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சீனிவாசன், 
டாக்டர். செந்தில் குமார், கோவில் உதவி ஆணையாளர் கருணாநிதி, கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதீஸ்வரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

                  நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்