மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை குமாரபாளையம் ஸ்ரீ செளடேஸ்வரி கோவில் திருவிழா
பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது
முன்னதாக 9 4 2022 சனிக்கிழமை அன்று இரவு 7 மணிக்கு மாகாளியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடைபெற்றது
தொடர்ந்து தினசரி இரவு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் கம்பம் சுற்றி ஆடி வந்தனர்
12 4 2022 செவ்வாய்க்கிழமை அன்று
மாலை 7 மணிக்கு ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கொலு வைத்தல் நடைபெற்றது
அதனைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு ராகுதீபம் கொண்டு வரப்பட்டது
இரவு 12 மணிக்கு ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மா காளியம்மனுக்கு அம்மை அழைத்தல் நடைபெற்றதது
13 4 2022 புதன் கிழமையன்று காலை 6 மணிக்கு
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மனுக்கும் மாகாளியம்மனுக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆடலுடன் மாவிளக்கு கொண்டுவரப்பட்டது
காலை 9 மணிக்கு பக்தர்கள் பூவோடு எடுத்து கம்பம் சுற்றி ஆடி வந்தார்கள்
மாலை 4 மணிக்கு முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது
இரவு 7 மணிக்கு கம்பம் கங்கையில் சேர்க்கப்பட்டது
14 4 2022 வியாழக்கிழமையன்று மஞ்சள் நீராட்டு விழா
ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாகாளி அம்மன் சப்பரத்தில் திருவீதி உலா வருகின்றது
மதிய அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெறுகின்றது
விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டு கொண்டார்கள்
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment