மக்கள் வெளிச்சம் நாளிதழ்

கோவை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற்சங்க கூட்டம் 



பொள்ளாச்சி;-ஏப்-26 கோவை அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிற் சங்க கூட்டம் கோவை தெற்கு மாவட்ட சங்கத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு  தமிழ்நாடு பெண்கள் இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜூலியா கலந்து கொண்டார் அவரிடம்  தொழிற்சங்கத்தின் குறிக்கோள்கள், மற்றும் நலவாரியத்தில் பதிவு செய்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழகப் பெண்கள் இயக்கத்தை சார்ந்தவர்கள் அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழில் சங்கத்தில் இணைந்து பணியாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று உடனடியாக சில உறுப்பினர்கள் பதிவு செய்தனர். மேலும் ஜூலியா 200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்து அவர்களுக்கும் நலவாரிய பலன்களை பெற்று தருவதாக உறுதியளித்தார் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைப்பு செயலாளர் சுதாகர் சிறப்பாக செய்துள்ளார்  நிகழ்ச்சியில்  தலைவர் வெங்கடாசலம், செயலாளர் பீட்டர் ரூபன், துணைத் தலைவர் கணபதி, துணை செயலாளர் பத்மநாப கிருஷ்ணன், சுபாஷ், தளபதி சுரேஷ், தண்டபாணி, தேவராஜ்,சத்தியா, சத்தியா, ஸ்ரீஜா, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்