மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி கஞ்சா விற்றவர் கைது
பொள்ளாச்சி, ஏப். 24- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா போன்றவற்றை தடுக்கும் விதமாக போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதையடுத்து மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ரங்கநாயகி தலைமையில் உதவி ஆய்வாளர் இளவேந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, சல்டானா ரோடு அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வெள்ளிங்கிரி என்கிற நபரை பிடித்து விசாரணை செய்ததில், விற்பனைக்காக அவர் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment