மக்கள் வெளிச்சம் நாளிதழ்
யானை மர்ம மரணம்
வனத்தில் தொடரும் சோகம்
பொள்ளாச்சி;-ஏப்-16
பொள்ளாச்சியை அடுத்த சேத்துமடை பகுதியில் காட்டு யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி
வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை மங்கரை பகுதியில் வனத்துறை களப்பணியாளர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சின்ன சல்ல கட்டி சரகப் பகுதியில் வந்து கொண்டிருந்த போது
அப்பகுதியில் காட்டு யானை ஒன்று கீழே விழுந்த படி உள்ளதை கண்டு அருகில் சென்று பார்த்தனர். அதில் பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே களப்பணியாளர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து நாளை வனத்துறை மருத்துவரைக் கொண்டு இறந்த காட்டு யானையின்
உடலை உடற்கூறு ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, டாப்சிலிப், பொள்ளாச்சி ஆகிய 3 வனச்சரகங்களிலும் யானைகள் மர்மமான முறையில் இறந்து வவ்ருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment