மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூர் பெரியகுளம் பூங்காவை தூய்மைபடுத்திய தன்னார்வலர்கள்
கோவை;-ஏப்-18 கோவை மாவட்டம் சூலூர் பெரியகுளம் அருகில் அமைந்திருக்கின்ற படகுத்துறை பூங்காவினை தூய்மைப்படுத்தும் பணியானது நீர்நிலைகள் அறக்கட்டளை, சூலூர் அனைத்து அரிமா சங்கங்கள், சூலூர் பொதுநல அமைப்புகள், சூலூர் பசுமை நிழல், உரம் அமைப்புகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூய்மை பணியானது பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன். பேரூராட்சித் துணைத் தலைவர்சோலை.கணேஷ் முன்னிலையில் நடைபெற்றது இந்த தூய்மைப்படுத்தும் பணியில் சூலூரின் பால் ஆர்வம் உள்ள இளைஞர்கள், மகளிர்கள், குழந்தைகள் வருகைதந்து தூய்மை செய்தனர் நோய் தொற்று காரணமாக கடந்த மூன்றாண்டுகளாக புதர் மண்டிக்கிடந்த சூலூர் படகுத்துறை பூங்காவினை சீரமைக்கும் பணியினை பொதுநல அமைப்புகள் மேற்கொண்டது முதல்கட்ட பணியாக புதர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவைகளை தூய்மை செய்ய ப்பட்டது தொடர்ந்து வரும் வாரங்களில் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு பழுதடைந்த விளையாட்டு உபகரணங்கள் சரிசெய்யப்பட்டு பாதுகாப்பான பொதுமக்களும் குழந்தைகளும் பயன்படும் விதமாக பூங்கா சீரமைக்கப்படும் என பசுமை நிழல் நிறுவனர் சூ.அ. விஜயகுமார் தெரிவித்தார் பேரூராட்சி தலைவர் தேவிமன்னவன் கூறுகையில் இதுபோல் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் பூங்காக்களை போர்க்கால அடிப்படையில் தூய்மை படுத்தப்பட்டு பகுதி மக்கள் பயன்படும் வண்ணம் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு மாதிரி பூங்காக்கள் ஆக மாற்றுவதற்கு ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார் மேலும் தனும் தன் ஆர்வலர்களுடன் இணைந்து துய்மை பணியினை மேற்கொண்டார் ஆர்வத்தோடு வருகை தந்து இந்த தூய்மைப் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்கள் வெகுவாக பாராட்டி அவருக்கு உற்சாகத்தைத் வழங்கினார் தூய்மை பணி முடிந்ததும் தூய்மைப் பணியை மேற்கொண்ட தன் ஆர்வலர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது
நிருபர் சூலூர் சேகர்
Comments
Post a Comment