மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பாலாறு வடிநில பகுதி
பாசன சங்க தேர்தல் 
தி.மு.க. முழு ஆதிக்கம் 



பொள்ளச்சி;-ஏப்-7 பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பாலாறு வடிநில பகுதிக்கான பாசன சங்கத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. வே வெற்றி பெற்றது.  
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் பாலாறு வடிநில பகுதியில் உள்ள பாசன
சங்க தேர்தல் நடத்த மாநில அரசு
அரசாணை வெளியிட்டது. பொள்
ளாச்சி
கோட்டத்தில்
மொத்தம் உள்ள, 21 சங்
கம் மற்றும், 124 ஆட்சி
மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 4ம் தேதி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 
16 தலைவர்கள் மற்றும், 120 ஆட்சி மண்டல தொகுதி
உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஐந்து தலைவர்கள் மற்றும், மூன்று ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடைபெற்றது.
நேற்று காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
தொண்டாமுத்துார்,
தேவம்பாடி, கிட்ட சூராம்பாளையம்,
கோமங்கலம், செட்டி
யக்காபாளையம் ஆகிய 5 இடங்களில் தேர்தல் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு பாலக்காடு ரோட்டில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஐந்து பாசன சங்கங்களின் தலைவர் பதவிகளிலும் தி.மு.க. வைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர். 
வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரான சப்-கலெக்டர் சுபம் தாக்கரே ஞானதேவ் ராவ் சான்றிதழ்களை வழங்கினார்.
வெற்றி பெற்றவர்களை தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர். வரதராஜன், ஒன்றிய பொறுப்பாளர்களான செட்டிக்காபாளையம் துரை, அய்யம்பாளையம் ராஜு, திம்மங்குது சக்திவேல், கன்னிமுத்து மற்றும் மெடிக்கல் பரமசிவம்    உள்ளிட்ட நிர்வாகிகள் வாழ்த்தினர்.
                           நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்