மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி விதிமீறல் கட்டடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் 



பொள்ளாச்சி;-ஏப்-11 பொள்ளாச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடத்துக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஜ.ஜி. காலனி B பிளாக் பகுதியில் சாந்தா காளிங்கராயர் என்பவர், தனக்குச் சொந்தமான 15 ஆயிரம் சதுரடி கொண்ட இடத்தில் வீடு கட்ட நகராட்சியிடம் அனுமதி கோரியிருந்தார். ஆய்வுக்குப் பின் வீடு கட்ட நகராட்சி அனுமதி அளித்தது. ஆனால் அவர் வர்த்தக நோக்கில் பள்ளிக்கான கட்டிடமாக கட்டினார். மேலும் உள்ளூர் திட்ட குழுமதிடம் அனுமதியும் கோரியிருந்தார். ஆனால் முறையான விதிமுறைகள் பின்பற்றாததால் அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் வீடு கட்ட அனுமதி பெற்று விதிமுறைகளை மீறி பள்ளிக் கட்டிடமாக கட்டியதை அறிந்த நகராட்சி அதிகாரிகள் நேற்று மேற்படி கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.
நகர்நல அலுவலர் சாந்தி நிர்மலா பாய், அலுவலர்கள் சிவகுமார், வரதராஜ், அசோக் குமார் உள்ளிட்டோர் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்   பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் கட்டித்துக்கு சீல் வைத்ததால் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. .

                              நிருபர் ஜெகன்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்