மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கோவை சூலூர் அஇஅதிமுக நகர செயலாளராக கார்த்திகைவேலன் போட்டியின்றி தேர்வு
கோவை;-மார்ச் கோவை மாவட்டம்
சூலூர் நகர அஇஅதிமுக நகர செயலாளர் போட்டியின்றி தேர்வு. கார்த்திகை வேலன்
மீண்டும் மூன்றாவது முறையாக சூலூர் நகர செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் சூலூர் பேரூராட்சியின் அஇஅதிமுக செயலாளர். கார்த்திகைவேலனுக்கு சூலூர் நகர அஇஅதிமுக சார்பாகவும், சூலூர் நகர சார்பு அணிகள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் கடந்த 7 ஆண்டுகளாக மக்களுடன் எளிதில் அணுகி, கட்சி தொண்டர்களையும், நிர்வாகிகளையும் அன்போடு அரவணைத்து சூலூரில் அஇஅதிமு கழகத்தை வழி நடத்தி வரும் கார்த்திகைவேலன் மீண்டும் போட்டியின்றி தேர்வு பெற நல்லாதரவு வழங்கிய கழக மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும், அனைத்து வார்டு செயலாளர்களுக்கும், நகர சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அஇஅதிமுக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார் கார்த்திகைவேலன் நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment