மக்கள் வெளிச்சம் நாளிதழ்

அதிமுகவிற்கு தாளம் போட்டவர் திமுகவிற்கு மாறினார்

அதிமுக பொதுக்கூட்டங்கள், ஜெயலலிதா பிறந்தநாள் எம்ஜிஆர் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் சுப்பிரமணியம்.

முக்கிய தலைவர்கள் பேசும்போதெல்லாம் இடையிடையே தன்னுடைய டிரம்ஸ் மூலம் தாளம் எழுப்புவார் தலைவர்களின் பேச்சை கூர்ந்து கவனித்து கொண்டிருப்பவர்கள் கூட இவரின் சத்தத்தால் திரும்பிப் பார்ப்பார்கள் சுமார் பத்தாண்டு காலம் இவர் பங்கேற்ற கூட்டங்கள் ஏராளம் இதனால் மேல்மட்ட தலைவர்கள் இருந்து கீழ்மட்ட அதிமுக தொண்டன் வரை இவரைத் தெரியாதவர்கள் இல்லை என்றே சொல்ல முடியாது.

அப்படி இருந்தவருக்கு அவர் நம்பியிருந்த கட்சி  உதவிகள் எதுவும் செய்யாததால் அதிமுகவிற்கு தாளம் போட்டவர் தற்போது திமுகவின் புகழை தாளம் போட்டு  பாடி வருகிறார்.

பொள்ளாச்சி புதிய, பழைய பேருந்து நிலையங்கள்  கடைவீதி உட்பட நகர பகுதிகளில் மக்கள் கூட்டம் உள்ள  முக்கிய பகுதிகளில் தற்போது திமுகவை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் குறித்து புகழ் பாடி வருகிறார்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்