மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி அருகே  விபத்தில் சிக்கிய லாரியில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி  பறிமுதல்

பொள்ளாச்சியில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் வழியில் உள்ள ஆலாங்கடவு  பகுதியில் இன்று அதிகாலையில் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி ரோட்டின் வலது புறமாகச் சென்று தரையில் மோதி நின்றது. விபத்து நடந்ததும் லாரியில் இருந்த டிரைவர்  தப்பி ஓடியதாக தெரியவருகிறது. விபத்து குறித்து போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர் விபத்து நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு லாரியை சோதனை செய்ததில் லாரியில் சுமார் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது . அதை கேரளாவிற்கு கடத்திச் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியதால் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓட்டம் பிடித்தார் ஆனைமலை போலீசார், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், ஆனைமலை வட்ட வழங்கல் அலுவலர் முருகராஜ் ஆகியோர்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த அதிகாரிகள்
லாரியில் இருப்பது ரேஷன் அரிசி என்பதும், அது கேரளாவுக்கு கடத்த இருந்தது என்பதும் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ரேசன் 15 டன் ரேசன் அரிசி மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றி குடிமைப் பொருள் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது அது மீண்டும் கேரளாவிற்கு தான் செல்லும் என அப்பகுதி மக்கள் மனதில் நினைத்தவாறே கடந்து சென்றனர் அரிசி கடத்தலில் ஈடுபட்ட லாரி விபத்தில் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ள கேரள மாநிலத்திற்கு சென்று இருக்கும் இது குறித்து அதிகாரிகள்  தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்