மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப்பில் சந்தன மரம் வெட்டிய 3 பேர் கைது ஒருவர் தலைமறைவு
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனசரகம் டாப்சிலிப் மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்துஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் வனச்சரகர் காசிலிங்கம் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சென்று பார்த்து மறைந்திருந்து கண்காணித்த போது வெள்ளை நிற மாருதி காரில் வாகனத்தில் வந்த இரு நபர்கள் வருவதையும் வனப்பகுதியில் இருந்து மூன்று பேர் தலைச்சுமையாக சந்தன மரத்துண்டுகளை சுமந்து காரில் சந்தன மரத் துண்டுகளை ஏற்றி கடத்த முயற்சித்த போது சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்டனர் இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் ஆனைமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணை செய்ததில் திருவண்ணாமலையை ஜமனாமரத்தூர் சேர்ந்த வெங்கடேஷ், முகமது பசீர், மணிகண்டன், சக்கரவர்த்திதெரியவந்தது இவர்களிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் மதிப்பில் உள்ள 73 கிலோ சந்தனகட்டைகள் மற்றும் மொபைல் போன்,மாருதி 800 கார் பறிமுதல் செய்தும்,சந்தன மரம் வெட்ட மூளையாக செயல்பட்ட கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியை சேர்ந்த மூசாஹாஜி என்பவரின் மகன் அப்துல் சலீம் செயல்பட்டுள்ளார் தலைமறைவாக உள்ள அப்துல் சலீம் பிடிக்கவனத்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்,வெங்கடேஷ் ,அப்துல் சலீம் மீது ஏற்கனவே சந்தன மரம் கடத்தல் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment