மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சியில் நகர்ப்புற தேர்தலையொட்டி காவல்துறையினர் கொடி அணிவகுப்பு
பொள்ளாச்சி உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் தேர்தலில் வாக்களிக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் பொள்ளாச்சியில் காவல்துறை கொடி அணிவகுப்பு பொள்ளாச்சி கோவை ரோடு மகாலிங்கபுரம் வளைவில் ஆரம்பித்து உடுமலை ரோடு தாலூகா காவல் நிலையம் வரை பொள்ளாச்சி முக்கிய சாலைகளில் நடைபெற்றது நிகழ்ச்சியை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபாஷினி கொடி அசைத்து துவக்கி வைத்தார் உடன் பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் தமிழ்மணி முன்னிலையில் நடைபெற்றது பொள்ளாச்சி சரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், போக்குவரத்து காவலர்கள்,ஆயுதப்படையினர்,சிறப்பு அதிரடி படையினர், ஊர்க்காவல் படையினர், காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி வஜ்ரா வாகனம் அணிவகுப்பில் இடம் பெற்றது
Comments
Post a Comment