மக்கள் வெளிச்சம் நாளிதழ்

SDPI கட்சியினர் தனித்துப் போட்டி..... கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் பொள்ளாச்சியில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.


பொள்ளாச்சி: SDPI கட்சி தமிழகம் முழுவதும் தனித்துப் போட்டியிடுவதாக அதன் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிவித்ததை அடுத்து பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் உள்ள SDPI கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை மற்றும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கோவை தெற்கு மாவட்ட தலைவர் பீர்முகமது தலைமை தாங்கினார் மாவட்ட பொதுச்செயலாளர் இக்பால் வரவேற்புரையாற்றினார்

கோவை மண்டல தலைவர் ராஜா உசேன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு  வேட்பாளர்களை அறிமுகம் செய்தார்.

முதல் கட்டமாக 14வது வார்டில் உஸ்மான் அலி, 16 வது வார்டுக்கு முஹம்மது பாரூக், 29 வார்டில் ஜாகிர் நிஷா ஆகிய மூன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார் மேலும் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் SDPl கட்சியின் செயல் வீரர் சேக் அப்துல் ஜலீல் எனும் ஷாஜகான் 7வது வார்டில் போட்டியிடப்போவதாக அறிமுகம் செய்து வைத்தனர் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்க உள்ளதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்

நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொருளாளர் ரகமத்துல்லா, மண்டல தலைவர் ராஜா உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்