மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி;-ஜன
பொள்ளாச்சி ஆளியார் அருகே உள்ள சின்னார்பதி பகுதியில் பழங்குடியின மக்கள் நாற்பத்தி எட்டு குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒற்றை காட்டு யானை இரவு நேரங்களில் வந்து சின்னார்பதி உள்ள மா .கூந்தப்பனை .வாழை போன்றவற்றை சாப்பிட்டது இதனையடுத்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டனர் .இந்த நிலையில் இன்று மாலை வனப்பகுதிக்குள் இருந்து மீண்டும் வந்த யானை வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் ஒய்யாரமாக நடந்து வந்து சின்னார்பதி பழங்குடியினர் வசிக்கும் இடத்துக்கு உணவு தேடி சென்றது தகவலறிந்து உடனடியாக வனத்துறையினர் விரைந்து வந்து பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் இருந்து காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டி வனப்பகுதிக்குள் அனுப்பிவைத்தனர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் வால்பாறை பொள்ளாச்சிசாலையில் நடுரோட்டில் யானை சுற்றி வந்தது இதனால் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீண்டும் யானை குடியிருப்பு பகுதியில் வராமல் தடுக்க இப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments
Post a Comment