மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சியில் தை பொங்கலை முன்னிட்டு திமுக சார்பில் மாபெரும் ரேக்ளா பந்தயம் 

 பொள்ளாச்சி;-ஜன கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வடக்கு,(கிழக்கு) மற்றும் (மேற்கு) ஒன்றியங்களின் சார்பில் தமிழர் திருநாள், தை பொங்கலை முன்னிட்டு மாபெரும் ரேக்ளா போட்டிகள் ராமபட்டினம் அருகே உள்ள பட்டியகவுண்டனூரில் நடைபெற்றது மேற்கு  ஒன்றிய கழக பொறுப்பாளர் திம்மங்குத்து சக்திவேல் துவக்கி வைத்தார். C.கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபிரகாஷ், மண்ணூர் ஊராட்சி மன்ற துணை தலைவர் தாவளம் ராசு, ஜமீன் புரவிபாளையம் முன்னாள் தலைவர் கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனையொட்டி 200 மீட்டர்,300 மீட்டர் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் 500க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் கலந்து கொண்டன.மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் K.வரதராஜன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளையும், தங்கக் காசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆனைமலை கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ரெட்டியாரூர் யுவராஜ், திருப்பூர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் ஆகியோரின் காளைகள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தன. கிணத்துக்கடவு தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் செட்டியக்காபாளையம் துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மோகன் வீரக்குமார், பொள்ளாச்சி நகர கழக துணைச் செயலாளர் நா.கார்த்திகேயன், நல்லூத்துகுளி கிளைச் செயலாளர் தர்மராஜ், C.கோபாலபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சதீஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நாகூர் செந்தில், இளைஞரணி நிர்வாகிகள் செந்தில், கௌரி, ஜெகதீஷ், ராமபட்டிணம் ஷாஜகான், ஹிமாலயா யுவராஜ், அம்பராம்பாளையம் ஜாகீர், பொன்மலையூர் சுரேஷ், ஜலத்தூர் சக்தி, சதீஷ், ராமநாதபுரம் செல்வகுமார், ராமபட்டினம் A.D.கிளை செயலாளர் துரை, சமது, அன்வர், ராமநாதபுரம் ஆறுச்சாமி, வடக்குக்காடு வருன்  உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்