மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி ஆனைமலை வி.ஆர்.டி பள்ளியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன் தேசிய கொடி ஏற்றி மரக்கன்றுகள் நட்டினார்
பொள்ளாச்சி;-ஜன 73 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆனைமலை வி.ஆர். டி .பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குடியரசு தின விழா கொடியை கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் K.வரதராஜன் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சுமார் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும், மாணவிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார் அத்துடன் தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பள்ளியின் வளர்ச்சிக்காக கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். உடனே கோவை தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் டாக்டர் K.வரதராஜன் அவர்கள் தனது சொந்த நிதியில் ரூபாய் 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். மேலும் பல் மருத்துவ சிகிச்சை நிபுணர் டாக்டர் AP.செந்தில்குமார், கோவை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்புக்குழு உறுப்பினர் ஆனைமலை சீனிவாசன், வழக்கறிஞர் ஆனைமலை மீரான்மொய்தீன் ஆகிய மூவரும் தலா ஒரு லட்சம் வழங்குவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பொள்ளாச்சி நகர கழக துணைச் செயலாளர் நா.கார்த்திகேயன், ஆனைமலை பேரூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி வீரமுத்து,ஹிமாலயா S.S யுவராஜ். நாயக்கன்பாளையம் தங்கம் குமரேசன், டாக்டர்.சரவணன், அம்பராம்பாளையம் ஜாகிர், இராமபட்டினம் ஷாஜகான், ஜாவித் அகமது, உட்பட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment