மக்கள் வெளிச்சம் நாளிதழ்
மாக்கினாம்பட்டி ஐயப்பன் கோயிலில் 16ம் ஆண்டு மண்டல பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்பு பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற 16ம் ஆண்டு மண்டல பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி ஸ்ரீ செல்வகணபதி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ ஓம் சக்தி ஒட்டாலம்மன், ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் 16ம் ஆண்டு மண்டல பூஜை விழா விமர்சையாக நடந்தது. மண்டல பூஜையை முன்னிட்டு கணபதி ஹோமம், கோ பூஜை, ஆராட்டு, ஐயப்பனுக்கு 108 கலச பூஜை, சிறப்பு ஐயப்பன் அபிஷேக பூஜை ஒட்டாலம்மன், ஸ்ரீ கன்னிமூல கணபதி பூஜை, திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் பஜனை பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து பெரிய விநாயகர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், சிறப்பு அபிஷேகம் ஆகியவையும் நடைபெற்றன. உடுமலை ரோடு கருப்பராயன் கோயிலில் இருந்து ஸ்ரீ ஐயப்பன் திருவீதி உலா விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடந்த மண்டல பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயில் நிர்வாகிகள...