மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி மதுவிலக்கு போலீசார் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களை அழித்தனர்
பொள்ளாச்சி;-ஜன-31பொள்ளாச்சியில் மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க வாகன சோதனை மற்றும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இதை அடுத்து பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த மதுபாட்டில்கள், கேரளாவிலிருந்து பொள்ளாச்சியில் கள்ளச்சந்தையில் விற்க கொண்டுவந்த மதுபாட்டில்கள் என 10,446 மதுபாட்டில்கள் 14 லட்சம் மதிப்பில் உள்ள மது பாட்டில்களை பொள்ளாச்சி கோவை ரோட்டில் உள்ள இடத்தில் மது பாட்டில்களை அமலாக்கத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் அறிவுறுத்தலின்படி மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் அமுதா ஆலோசனைப்படி உதவி ஆய்வாளர் ஜான் ஜூனியன் சிங், கோட்ட கலால் துறை அதிகாரிவிஜயகுமார் மற்றும் போலீசார் காளிதாஸ்,முருகன்,சுமதி, வனிதா ,பெரியசாமி, சாந்தகுமார், சரவணகுமார் ஆகியோர் அழித்தனர், உதவி ஆய்வாளர் ஜான்ஜுனியன் சிங் கூறுகையில் கோவை மாவட்டத்தில் மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் தமிழக கேரளா எல்லையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.
Comments
Post a Comment