மக்கள் வெளிச்சம் நாளிதழ்

வால்பாறையில் சிறுவனை தாக்கியது சிறுத்தை 

வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட  நல்லகாத்து எஸ்டேட் 2 வது டிவிசன் பகுதியில் வசித்து வரும்சிறுவன் தீபக் (11) இன்று  மாலை 4;30 மணியளவில் எஸ்டேட் குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு வந்த சிறுத்தை தாக்கியது இதில் சிறுவனுக்கு இடது தோள்பட்டை முதுகு பகுதி மற்றும் மார்பு பகுதியில் சிறிய அளவிலான நகக் காயம் ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டது இத்தகவல் அறிந்த வனத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் கள இயக்குனர், துணை கள இயக்குனர் அறிவுரைப்படி காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு ரூபாய் 10.000 புதிய ஆடைகள் மானாம்பள்ளி வனத்துறையினர் வழங்கினர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்