மக்கள் வெளிச்சம் நாளிதழ்
வால்பாறை சாலையில் உலாவந்த ஒற்றை புலி
வால்பாறை:-ஜன-31 ஆனைமலை புலிகள் காப்பகம் 956 சதுர கிலோமீட்டர் உள்ளடக்கிய வனச்சரக பகுதிகள் வால்பாறை,மானாம்பள்ளி, உலாந்தி,பொள்ளாச்சி, உடுமலை, அமராவதி என ஆறு வனசரகமும் வெளி மண்டலம் கொடைக்கானல் பகுதியும் உள்ளது, இங்கு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, புலி, சிங்கவால் குரங்கு, செந்நாய், புள்ளிமான், வரையாடு, மற்றும் இருவாட்சி பறவை உட்பட அபூர்வ பறவையினங்கள் தாவரங்கள் நிறைந்த உள்ளது இன்று காலையில் வால்பாறை காரில் சென்ற சுற்றுலா பயணி வால்பாறை கவர்கல் அருகே உள்ள ஊமையாண்டி முடக்கு சாலையில் புலி உலா வந்தது இதை சுற்றுலா பயணி தனது மொபைல் போனில் புலி சாலையில் நடந்து சென்று வனப்பகுதிக்குள் செல்லும் காட்சியை படம் பிடித்துள்ளார் இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.
Comments
Post a Comment