மக்கள் வெளிச்சம் நாளிதழ்
கிணத்துக்கடவில் வருமான வரித்துறையினர் போல நடித்து 15 லட்சம் அபேஸ்..
உடனடியாக வலைவீசி பிடித்தது மாவட்ட காவல்துறை.
கிணத்துக்கடவு: ஜன.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் வசிக்கும் பஞ்சலிங்கம் என்பவரது வீட்டில் சில மர்ம நபர்கள் தாங்கள் வருமான வரித்துறையினர் எனக் கூறி நடித்து சோதனையிடுவது போல ரூ 15 லட்சம் ரொக்கம் மற்றும் சிசிடிவி பதியப்பட்ட டிஸ்க் மற்றும் செல்போன்களை எடுத்துச் சென்றதாக கிணத்துக் கடவு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதில் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்
உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் போலீசார்
3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில்
கோவை ரோடு கற்பகம் கல்லூரி அருகில்
இதில் தொடர்புடைய பிரவீன்குமார். ராஜேந்திரன்.மணிகண்டன் ஆகியோரை பிடித்தனர். அவர்கள் கூறிய தகவலின் படி அவர்களிடம் இருந்த ரூ 3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கு உடந்தையாக இருந்த கிணத்துக் கடவை சேர்ந்த சதீஸ்.ராமசாமி.ஆனந்த்.தியாகராஜன் ஆகியோர்களையும் கைது செய்தனர்.
இதில் இன்னும் தலைமறைவாக உள்ள மூவர் மேத்யூ.மகேஸ்வரன் பைசல் ஆகியோரை வலைவீசி தேடி வரு கின்றனர்.
இதில் தீவரமாக பணியாற்றி கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்.
Comments
Post a Comment