மக்கள் வெளிச்சம் நாளிதழ்

பொள்ளாச்சி கிணத்துக்கடவில் 72.57 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் முதல்வர்  ஸ்டாலின் காணொளியில் திறந்து வைத்தார் 

 பொள்ளாச்சி;ஜன கிணத்துக்கடவு வட்டம் கப்பலாங்கரைஊராட்சி, கே.வி.கே நகரில் ரூ 72.57 கோடி மதிப்பில்  அமைக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி தெற்கு மற்றும் கிணத்துக்கடவு  ஊராட்சி ஒன்றிய குடியிருப்பு பகுதிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தினை  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் கே வி கே நகரில்  நடைபெற்ற இந்நிகழ்வில் மாண்புமிகு மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும்  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் கலந்து துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ் சமீரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு பி.டி.ஓ தனலட்சுமி, பி.டி.ஓ ஜெயக்குமார்,  கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.வரதராஜன் கே.வி.கே சபரிகார்த்திகேயன்  செட்டியக்கா பாளையம் துரை, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள்,  உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்