மக்கள் வெளிச்சம் நாளிதழ்
டாப்சிலிப் வால்பாறை பகுதிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை
பொள்ளாச்சி: ஜன.08 ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை,முன்பதிவு கட்டணம் வாபஸ் வனத் துறை அறிவித்துள்ளது. உலகம் முழுதும்மூன்றாவது லை ஒமிக்கிரான் வைரஸ் தொற்றுபரவி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு வெள்ளி, சனி, ஞாயிறு வழி பாட்டு ஸ்தலங்களுக்கு வழிபட பொதுமக்களுக்கு தடை விதித்தது,நேற்று இரவு முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு படுத்தப்பட்டுள்ளது,இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்ஸ்லிப் பகுதிக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்,
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் துணை கலை இயக்குனர் கணேசன்கூறுகையில் டாப்சிலிப் பகுதியில் முன்பதிவு செய்திருந்த விடுதிகளில் செலுத்திய கட்டணம் திருப்பி செலுத்தப்படும் சனி,ஞாயிறு இரு தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது எனதெரிவித்தார்.
Comments
Post a Comment