மக்கள் வெளிச்சம்
வால்பாறையில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் போலீசார் அதிரடி
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களான அதிகளவில் விற்பனையாவதை தடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வால்பாறை பகுதிகளில் கஞ்சா பதுக்கி கடத்தி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வால்பாறை டி.எஸ்.பி சீனிவாசன் அறிவுரையின் படி வால்பாறை காவல் நிலைய ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன்,சிறப்பு உதவி ஆய்வாளர் பாலாஜி ஆகியோர் வால்பாறையில் இயேசு என்பவரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டதில் 4 கிலோ கஞ்சா பதிக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது போலீசார் இயேசுவை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இயேசு மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்
Comments
Post a Comment