மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம் கிராம சபை கூட்டம் நடத்த மக்கள் நீதி மையம் கட்சியினர் மனு அளித்தனர். பொள்ளாச்சி
மக்கள் நீதி மையம் கோவை தென்கிழக்கு ஆதிதிராவிட நல அணியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் அலர்களிடம் கிராமசபை கூட்டம் நடத்த வலியுறுத்தி மனு அளித்தனர், மனுவில் மகாத்மா காந்தியின் கனவான கிராம சபை கூட்டம் மக்கள் நீதி மையம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு களப்பணிகள் கருத்தரங்குகளை முன்னெடுத்து குறிப்பாக கிராம ஊராட்சி அமைப்புகள் விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது வருகிற 15-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டுமெனவும் ஏழு நாட்களுக்கு முன்பாக கிராமசபை கூட்டம் அழைப்பு தருவது கிராம சபையில் முன்னெடுக்க வேண்டிய கிராம ஊராட்சி வரவு செலவு அறிக்கை வங்கி கணக்கு புத்தகங்கள் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் கிராம நலன் கருதி மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை முறையாக தீர்மானங்கள் பதிவு செய்ய வேண்டும் கூட்டத்தில் அனைத்து ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் கூட்டம் நடைபெறும் பொழுது வீடியோ புகைப்படம் எடுத்து ஆவணமாக வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்,இதில் மாவட்ட துணை செயலாளர் திரு.A. பாபு பிரசாத்,திரு.H.செந்தாமரை கண்ணன், மாவட்ட நற்பணி அமைப்பாளர் திரு.ம. பஷீர்,பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் திரு.R.கருப்புசாமி,மற்றும் வார்டு செயலாளர்கள் T.ஜெயகுமார்,
P. சிவக்குமார்,
T. பாக்கியராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment