மக்கள் வெளிச்சம்
பொள்ளாச்சி நவமலையில் மீன் பிடிக்கச் சென்றவர் பலி போலீசார் விசாரணை
பொள்ளாச்சி அருகே உள்ள நவ மலையில் தனியார் தோட்டத்தில் பணிபுரிந்து வரும் காளியப்பன் அதே பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி இருவரும் நண்பர்கள் ஆவர் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு இருந்துள்ளனர் மதியம் முத்துப்பாண்டியும், காளியப்பனும் ஆழியார் அணை நவமலையில் உள்ள சொறுக்கல் பள்ளத்தில் மீன்பிடிக்க சென்று உள்ளனர், முத்துபாண்டி மட்டும் இரவு வீடு திரும்பி உள்ளார், காளியப்பன் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் காளியப்பனை தேடி வந்துள்ளனர், அவர் அணிந்திருந்த உடைகள் சொறுக்கல் பள்ளம் ஆற்றின் கரையோரப் பகுதியில் இருந்ததால் காளியப்பன் மனைவி ஆழியார் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் காளியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர்,பின் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக காளியப்பன் மீட்கப்பட்டார், மேலும் அவரது நண்பர் முத்துபாண்டியிடம் வால்பாறை துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணா தலைமையில் ஆழியார் காவல்நிலைய போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment