மக்கள் வெளிச்சம்
ஆனைமலை புலிகள் காப்பகம் 9 வது கொண்டை ஊசி காட்சி முனைக்கு செல்ல தடை
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணையின் அழகை கண்டு களிக்க வனத்துறையினர் காட்சி முனை அமைத்துள்ளனர், கொரொனா வைரஸ் இரண்டாம் அலையின் காரணமாக தமிழக அரசு சுற்றுலா பயணிகளுக்கு வால்பாறை சுற்றுலா செல்ல தடைசெய்யப்பட்டது, மேலும் வால்பாறை செல்லும் மர்ம நபர்கள் காட்சிமுனை பகுதியில் சில தினங்கள் முன்பு கதவுகளை உடைத்து உள்ளனர் இதையடுத்து வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின்படி காட்சி முனை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது மேலும் வரையாடு நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்,வரையாடு மற்றும் வன விலங்குகளுக்கு தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
Comments
Post a Comment