மக்கள் வெளிச்சம்
ஆளியார் அணை நிரம்ப உள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணி துறை எச்சரிக்கை
பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான வால்பாறை மற்றும் சின்னகல்லர்,சோலையார் அணை,சக்தி தலநார் எஸ்டேட் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிற்றோடைகள் வழியாக நீர் பெருக்கெடுத்து ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது,அணையின் முழு கொள்ளளவு 120கன அடி ஆகும்,தற்பொழுது 118.65வரை உயர்ந்துள்ளது, நீர்வரத்து 227 கன அடியும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 592 கனஅடி ஆகும்,ஆழியார் அணை ஒட்டியுள்ள பகுதிகளில் 23 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது, இதையடுத்து வருவாய்த் துறையினர் பொதுப்பணித்துறையினர் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment