மக்கள் வெளிச்சம்

வால்பாறை காவல் ஆய்வாளருக்கு கோவை எஸ்.பி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்

 கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் அதிகளவு கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில் கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் வால்பாறை டி.எஸ்.பி சீனிவாசன் ஆலோசனையின் பேரில் புதிதாக பொறுப்பேற்றுள்ள வால்பாறை இன்ஸ்பெக்டர் கற்பகம் அதிரடி சோதனை மேற்கொண்டு வால்பாறை புதுத்தோட்டம் பகுதியில் 4 கிலோ கஞ்சா பதுக்கி விற்பனை செய்ய முற்பட்ட இயேசு என்பவரை அதிரடியாக கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தார் வால்பாறை கேரளா எல்லைப் பகுதியாக உள்ளதால் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார். 
  வால்பாறை போலீசார் அதிரடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டு கடத்தல் கஞ்சா விற்பனையை தருத்து வந்ததை பாராட்டி வால்பாறை காவல் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் மேலும் வால்பாறை போலீசார் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்