மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சி 60 அடி மரத்தில் ஏறி கீழே குதிப்பதாக மிரட்டல் தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி மீட்பு

பொள்ளாச்சி மண்ணூர் இராமபட்டணம் சோதனைச் சாவடி அருகே உள்ள பெரிய புளியமரத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் 60 அடி உயரம் வரை மேலே ஏறி கீழே குதிப்பதாக கூறிக்கொண்டிருந்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது 
 அருகிகிருந்தவர்கள் உடனடியாக காவல் துறையினருக்கும், தீயணைப்பு  துறையினருக்கும் தகவல் தரவே தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் வந்த மீட்பு படையினர் வலை கட்டி கீழே குதிக்கச் சொல்லியும் குதிக்காமல் தகராறு பண்ணவே அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரிய வந்தது அதன் பிறகு மீட்பு படையினர் மரத்தின் மேல் ஏறி கயிற்றில் கட்டி கீழே இறக்கினர். விசாரணையில் அவரது பெயர் துரையன் (55) மண்ணூர் கலைஞர் காலனியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் மகன் என தெரிய வந்தது அதன் பின்னர் அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களிடம் அவரை ஒப்படைத்தனர் இச்சம்பவத்தால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு  ஏற்பட்டது

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்