மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சி அருகே புதிய காரை ஓட்டி பார்த்த போது கார் கிணற்றில் விழுந்து விபத்து   தாத்தா பலி பேரன் படுகாயம்

 பொள்ளாச்சி அருகே உள்ள ஏ,நாகூர் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் (67) என்பவர் கடந்த வாரம் மாருதி சுசூகி X L6 என்ற புதிய காரை வாங்கி உள்ளார். தனது தோட்டத்தில் நின்றிருந்த காரை தனது பேரன் நகுல்கிருஷ்ணனை (வயது-8)  காரில் ஏற்றிக் கொண்டு ஓட்டி பார்த்துள்ளார் காரின் வேகத்தில் நிலை தடுமாறி கார் தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றின் உள்ளே விழுந்து விபத்துக்குள்ளானது.
   தகவலறிந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறை அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் விரைந்து சென்று கிணற்றில் விழுந்த காரையும் ஈஸ்வரன் அவரது பேரன் நகுல்கிருஷ்ணனையும் மீட்டனர் ஆனால் சம்பவ இடத்திலேயே ஈஸ்வரன் இறந்து விட்டார் பேரன் படுகாயங்களுடன் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து கோமங்கலம் காவல்நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்