மக்கள் வெளிச்சம்

பொள்ளாச்சியில்  கள்ளகாதலுக்கு இடையுறாக இருந்த 2 1/2 வயது சிறுமியை கொலை செய்த தாய் மற்றும் கள்ள காதலன் கைது 

 பொள்ளாச்சி அருகே ஆனைமலை தம்மம்பதி பகுதியில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு மணிகண்டன் மற்றும் சரோஜினிக்கு பிறந்த இரண்டரை வயது சிறுமி நிவ்யாஸ்ரீ சந்தேக மரணம் அடைந்ததை அடுத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வனகரத்தினம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார், இச்சம்பவம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்துவிசாரணை செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம்   உத்தரவையடுத்து வால்பாறை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் சின்னகாமன், கார்த்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர், இதனையடுத்து சரோஜினி ஆனமலை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் சம்பத்திடம் சரணடைந்து நிவ்யாஸ்ரீயை கழுத்து நெறித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார், கிராம நிர்வாக அலுவலர் ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் போலீசார் சரோஜினியிடம் விசாரணை மேற்கொண்டதில் தனக்கும் தன் கணவருக்கும் அடிக்கடி சண்டை வரும் ஆதலால் எனது அம்மா வசிக்கும் சேத்துமடை அண்ணா நகர் பகுதி வீட்டுக்கு சென்று விடுவதாகவும் அப்பொழுது தான் கூலி வேலைக்கு செல்லும் பொழுது சர்க்கார்பதி சேர்ந்த பொம்மன் என்கிற சின்ன பொம்மன் என்பவருடன் பழகி கடந்த சில மாதங்களாக காதலித்து தனிமையில் இருந்ததாகவும், தங்களின்  கள்ள உறவுக்கு சிறுமி இடைஞ்சலாக உள்ளதால் நிவ்யாஸ்ரீயை கொலை செய்ய பொம்மன் கூறியதாகவும் தனது கணவர் மணிகண்டன் வேலைக்கு சென்றபிறகு நிவ்யாஸ்ரீயை கடந்த 14ம் தேதி கழுத்து நெரிந்து கொலை செய்தாக சரோஜினி போலீசாரிடம் தெரிவித்தார், இதையடுத்து தலைமறைவாக இருந்த பொம்மனை சேத்துமடை பஸ் நிறுத்தத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்தனர்  சந்தேக மரணம் கொலை வழக்காக மாற்றப்பட்டு நீதிமன்றம் ஜே.எம்  ஒன்றில் ஆஜர்படுத்தி இருவரையும்சிறையில் அடைத்தனர்,கள்ளக்காதல் உறவுக்கு இடைஞ்சலாக இருந்த குழந்தையை தாய் கழுத்து நெறித்து கொலை செய்தது ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Comments

Popular posts from this blog

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்

மக்கள் வெளிச்சம் நாளிதழ்