மக்கள் வெளிச்சம் நாளிதழ்
பொள்ளாச்சி ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.பொள்ளாச்சி-ஆகஸ்ட்-11 தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டிகளை மீண்டும் திறந்து விடவும்,புதுச்சேரி சண்டிகர் யூனியன் பிரதேசங்களில் வழங்குவது போல் மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் மானியம் வழங்கிடவும், ரயில்நிலையங்களில் மின்தூக்கி நகரும் படிக்கட்டுகள் இயக்க எனவும் மத்திய அரசை கண்டித்து கோஷம் மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் பொள்ளாச்சி, வால்பாறை கிணத்துக்கடவு,ஆனைமலை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment